நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரி முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறுகோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக இன்று (புதன்கிழமை) ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு உண்ணாப்புலவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர். அத்தோடு வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையை முற்றுகையிட்டும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த போராட்டம் காரணமாக முல்லைத்தீவு நகரின் நடவடிக்கைகள் … Continue reading நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரி முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்!